செய்திகள்
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அமராவதி அணையில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2அடி உயர்வு

Published On 2021-06-18 08:13 GMT   |   Update On 2021-06-18 08:13 GMT
அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மூணாறு, தலையாறு, கொடைக்கானல் மலையின் மேற்குப்பகுதிகள் மற்றும் வால்பாறை கிழக்கு பகுதிகளில்  கன மழை பெய்து வருகிறது.

தலையாறு, மறையூர் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பாம்பாற்றில் அதிகளவு நீர்வரத்து காணப்படுகிறது.மேலும் தேனாறு, சின்னாறு மற்றும் காட்டாறுகள் வாயிலாக அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் அதிகப்பட்ச நீர் வரத்து அணைக்கு நிலவி வருவதால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்த முள்ள 90 அடியில் 77.30 அடியாகவும், நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில் 2,956.09 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,102 கன அடியாக உள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம், 75.30 அடியாக இருந்த நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 77.30அடியாக உள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில்:

அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதம் அணை நீர் இருப்பு திருப்தியாக உள்ள நிலையில் பருவமழையும் துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் விரைவில் நிரம்பும் வாய்ப்புள்ளது என்றனர்.
Tags:    

Similar News