செய்திகள்
கோப்புப்படம்

குழந்தை திருமணத்தில் பங்கேற்றால் 2ஆண்டு சிறை-கலெக்டர் எச்சரிக்கை

Published On 2021-06-18 07:45 GMT   |   Update On 2021-06-18 07:45 GMT
குழந்தை திருமணம் நடப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம்.
திருப்பூர்:
 
குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி குழந்தை திருமணம் நடத்தியவர்கள், தூண்டியவர்கள், பங்கேற்பவர்கள் குற்றவாளி ஆவார்கள். இக்குற்றம் புரிந்தவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.

குழந்தை திருமணம் நடப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். கலெக்டர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உள்ளாட்சி அமைப்பு, அங்கன்வாடி பணியாளர், தலைமை ஆசிரியர், மகளிர்குழுவினர், வி.ஏ.ஓ., உள்ளிட்டோரிடம் புகார் அளித்து தடுக்கலாம். 

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பது தெரியவந்தால்  1098 என்ற எண்களில் சைல்டு ஹெல்ப் லைன் பணியாளரிடமும் புகார் செய்யலாம் என திருப்பூர் மாவட்ட  கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News