செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரக்கூடாது- அன்புமணி அறிக்கை

Published On 2021-06-17 08:53 GMT   |   Update On 2021-06-17 08:53 GMT
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தாக்கல் செய்துள்ள அனுமதியை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொள்ளிடக்கரை மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான கிணறுகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி பாசனப் பகுதிகளின் ஓர் அங்கமாகத் திகழும் அரியலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தாக்கல் செய்துள்ள அனுமதியை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News