செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணல் கடத்தல்

Published On 2021-06-16 18:00 GMT   |   Update On 2021-06-16 18:00 GMT
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணல் கடத்தல் லாரி பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன் நேற்று முன்தினம் இரவு சிறுவங்கூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது கோமுகி ஆற்றின் அருகே உள்ள சிறுவர் புளியந்தோப்பு பகுதியில் ஒரு லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் சென்றதை பார்த்து ராமன் அருகில் சென்றார். இவரை கண்டதும் இரு டிரைவர்களும் வாகனங்களை நடுவழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் லாரியின் பின்பகுதிக்கு சென்று பார்த்தபோது அதில் மணல் இருந்தது. இதனால் கோமுகி ஆற்றில் இருந்து மணலை கடத்தி செல்ல முயன்றதும், போலீசாரை கண்டதும் டிரைவர்கள் தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை ராமன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைத்தார். மேலும் மணல் கடத்தியதாக சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் தேவேந்திரன் மற்றும் பொக்லைன் எந்திர டிரைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
Tags:    

Similar News