செய்திகள்
சஸ்பெண்டு

நியாயவிலை கடை விற்பனையாளர் சஸ்பெண்டு

Published On 2021-06-16 08:24 GMT   |   Update On 2021-06-16 08:24 GMT
14 மளிகை தொகுப்பில் 12 பொருட்கள் மட்டுமே வழங்கியது தொடர்பாக நியாயவிலை கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
செஞ்சி:

செஞ்சி அருகே தேவனூர் கிராமத்தில் கொரோனா நிவாரண உதவி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் மளிகை பொருட்கள் தொகுப்பில் 2 பொருட்கள் குறைவாக உள்ளதாக பெண் ஒருவர் போன் மூலம் அமைச்சர் செஞ்சி மஸ்தானை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக தேவனூர் கிராமத்துக்கு நேரில் சென்று மளிகை தொகுப்பை ஆய்வு செய்தார். அப்போது உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இல்லாமல் 12 பொருட்கள் மட்டுமே வழங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூட்டுறவுதுறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தேவனூர் நியாயவிலைக்கடை விற்பனையாளர் கர்ணனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News