செய்திகள்
கோப்புப்படம்

கிராம சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-16 07:00 GMT   |   Update On 2021-06-16 07:00 GMT
மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு பணிகள் காரணமாக கிராமங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் கிராமப்புற மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது.

கிராம, நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார துறையினரின் மேற்பார்வையில் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்த முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்தந்த கிராம ஊராட்சி தலைவர் பொறுப்பில் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பொதுவான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் கிராமப்புற மக்களின் அலைச்சலை தவிர்க்க 5 அல்லது 6 கிராமங்களை உள்ளடக்கிய கிராம துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்த திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News