செய்திகள்
கோப்புப்படம்

தடுப்பூசி செலுத்த திரளும் பொதுமக்கள்

Published On 2021-06-15 08:04 GMT   |   Update On 2021-06-15 08:04 GMT
திருப்பூர் மாவட்டத்தில் எங்கு, எப்போது தடுப்பூசி முகாம் நடக்கிறது என்பதை முதல் நாளே அறிவிக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த நாளுக்கு நாள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் சில ஆயிரம் தடுப்பூசி மருந்து மட்டுமே வந்துள்ளது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் 25 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், கடந்த வாரம் வரை 12 சதவீத பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு குறைந்த அளவே தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி மையத்திற்கு வரும் பொதுமக்கள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் எங்கு, எப்போது தடுப்பூசி முகாம் நடக்கிறது என்பதை முதல் நாளே அறிவிக்க வேண்டும். அதேபோல டோஸ் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட அமைச்சர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆதங்கப்பட்டனர்.

இதனிடையே பல்லடம், செம்மிபாளையம், பூமலூர், அருள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். அதிகாலை 3 மணிக்கே பொதுமக்கள் டோக்கன் பெற வரிசையில் நின்றிருந்தனர். ஆனால் பலர் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பொதுமக்கள் கூறுகையில்,

‘தினமும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருக்க 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று கூறுகின்றனர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
Tags:    

Similar News