செய்திகள்
முக ஸ்டாலின்

அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

Published On 2021-06-14 12:56 GMT   |   Update On 2021-06-14 12:56 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் இன்றி அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கில், தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக், தேநீர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் நடமாட்டம் பொது இடங்களில் அதிக அளவில் காணப்பட தொடங்கியுள்ளது. சாலைகளிலும் வாகனங்கள் அதிகமாக செல்வதை காண முடிகிறது. ஊரடங்கை யாரும் மீறக்கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது. அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம்.
Tags:    

Similar News