செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-14 12:54 GMT   |   Update On 2021-06-14 12:54 GMT
ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,700 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 10,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒதுக்கீடு வரபெற்றவுடன் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,700 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 10,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News