செய்திகள்
திருப்பூரில் ஒர்க்ஷாப்கள் திறக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

ஒா்க் ஷாப்-கண் கண்ணாடி கடைகள் திறப்பு

Published On 2021-06-14 08:22 GMT   |   Update On 2021-06-14 10:34 GMT
பொதுமக்கள் சிலர் இ-பதிவு நடைமுறை தெரியாமல் சென்றனர். அவர்களுக்கு போலீசார் விளக்கம் அளித்து அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு இன்று முதல் சில தளர்வுகளுடன் மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சில அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன.  

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள்மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்  இ-பதிவுடன்'அனுமதிக்கப்பட்டுள்ளது.

எலக்ட் ரீசியன்,பிளம் பர்கள், கணினி மற்றும் எந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்களுடைய வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அத்தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர்கள் சேவை கோரியவர்களின் வீடுகளுக்கு சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.நாளை முதல் இ-பதிவு இல்லாமல் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்து அனுப்பினர்.

சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்லாதவை) திறக்கப்பட்டன. கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஒர்க்ஷாப்கள்  அடைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்க முடியாமல் தவித்து வந்தனர். இன்று திறக்கப்பட்டதையடுத்து பழுதுகளை சரிபார்த்தனர். இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஒர்க்ஷாப்களில் பழுது பார்க்க இருசக்கரவாகனங்கள் ஏராளமாக குவிந்தன. 

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ.பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாடகை டாக்சிகளில் ஓட்டு நர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள்மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அதனை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.பயணிகளிடம் இ-பதிவை வாங்கி பார்த்து அனுப்பி வைத்தனர். இ-பதிவு இல்லாதவர்கள் திருப்பி அனுப்பபட்டதுடன் சிலருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். 

 

வேளாண் உபகரணங்கள், பம்புசெட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்லாமல்) செயல்பட தொடங்கியுள்ளன. இதேப்போல் கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டன.மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனைகாலை 6 மணிமுதல் மாலை  5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதால் மண்பாண்ட கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. 

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் மட்டுமே செயல் பட வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதித்தல் கூடாது.கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

மேலும் நிறுவனங்கள்,கடைகளின் செயல் பாடுகளை கண்காணித்திடும் பொருட்டு மாவட்டத்தில் துணை கலெக்டர் நிலை அலுவலர்களின் தலைமையில் பறக்கும்படை கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.விதிமுறைகளை கடை பிடிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News