செய்திகள்
ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்த காட்சி.

ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

Published On 2021-06-14 08:19 GMT   |   Update On 2021-06-14 10:37 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.

தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் ஆக்சிஜன் வசதிகள் தொடர்ந்து தன்னார்வலர்களால் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் யங் இந்தியன்ஸ் மற்றும் சி.ஐ.ஐ. அமைப்பு சார்பாக ரூ.70 லட்சம் மதிப்பில் 350 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.  அதனை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேல் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 800ஆக குறைந்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News