செய்திகள்
கோப்புப்படம்

தட்டுப்பாட்டை நீக்க உரம் கொள்முதல் செய்ய ஏற்பாடு

Published On 2021-06-14 07:17 GMT   |   Update On 2021-06-14 07:17 GMT
குறிப்பாக சின்ன வெங்காயம் பயிரிடப்படும் 650 எக்டருக்கு 163 மெட்ரிக் டன் டி.ஏ.பி., உரம் தேவையென வேளாண்துறை கணக்கிட்டுள்ளது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கரீப் பருவத்தில் வேளாண் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் ஒன்றியங்களில் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உரத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

குறிப்பாக சின்ன வெங்காயம் பயிரிடப்படும் 650 எக்டருக்கு 163 மெட்ரிக் டன் டி.ஏ.பி., உரம் தேவையென வேளாண்துறை கணக்கிட்டுள்ளது. அதில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஒன்றியங்களுக்கு கூடுதல் உரத்தை பெற்று வழங்க மாவட்ட வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:-

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அவசர தேவைக்காக, ‘டான்பெட்’ சேமிப்பு குடோன் மூலமாக 111 டன் டி.ஏ.பி., உரம் பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் 650 டன் அளவுக்கு கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உரம் விற்பனை நிலையங்களில்  விலை பட்டியல்களுடன் புகார் தெரிவிக்க அந்தந்த வேளாண் உதவி இயக்குனர் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News