செய்திகள்
கரட்டாங்காடு பகுதியில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ள காட்சி படத்தில் காணலாம்.

கரட்டாங்காடு கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு

Published On 2021-06-14 07:10 GMT   |   Update On 2021-06-14 07:10 GMT
கரட்டாங்காடு பகுதியில் கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
திருப்பூர்:
 
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும் புதிதாக தொற்று பரவல் பகுதிகள் கண்டறியப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 40 ஆக உள்ளது.

இந்தநிலையில் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அப்பகுதியின் நான்கு வீதிகளும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு மற்ற பகுதியினர் நுழையவும், அப்பகுதியினர் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சுகாதார பிரிவினர் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணி மேற்கொண்டனர். கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தொற்று பாதித்த குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
Tags:    

Similar News