செய்திகள்
சென்னை காவல் ஆணையர்

முககவசம் அணிந்தால் மட்டுமே கடையில் மது வாங்க அனுமதி- சென்னை காவல் ஆணையர்

Published On 2021-06-13 13:59 GMT   |   Update On 2021-06-13 14:10 GMT
டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை தடுக்க தடுப்புகள் அமைத்துள்ளோம். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 5-வது முறையாக அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில்,  14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பெருநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று ஆய்வு செய்தார்.



அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-


முக கவசம் அணிந்தால் மட்டுமே கடையில் மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள். டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை தடுக்க தடுப்புகள் அமைத்துள்ளோம். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். என்று கூறினார்.
Tags:    

Similar News