செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கை மீறிய 407 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-12 14:28 GMT   |   Update On 2021-06-12 14:28 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
கரூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வெளியிடங்களுக்கு செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 263 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.52,600-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் 16 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.8 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. மேலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 4 வழக்கு பதியப்படடு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News