செய்திகள்
கோப்புப்படம்

சின்னவேடம்பட்டியில் 2-ம் தவணையாக 190 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-12 09:33 GMT   |   Update On 2021-06-12 09:33 GMT
கோவை மாநகராட்சியின் 27, 42 வது வார்டு பகுதிகளை உள்ளடக்கிய சின்னவேடம்பட்டி பகுதியில் நேற்று 2 ம் தவணை தடுப்பூசி செலுத்த சுமார் 190 டோஸ்கள் வந்திருந்த நிலையில் 190 நபர்கள் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கணபதி:

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்தப்படுவது தடுப்பூசி பற்றாக்குறையினால் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. 

இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசி நேற்று வந்ததை தொடர்ந்து அதனை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. கோவை மாநகராட்சியின் 27, 42 வது வார்டு பகுதிகளை உள்ளடக்கிய சின்னவேடம்பட்டி பகுதியில் நேற்று 2 ம் தவணை தடுப்பூசி செலுத்த சுமார் 190 டோஸ்கள் வந்திருந்த நிலையில் 190 நபர்கள் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் முருகன், மேற்பார்வையாளர் சம்பத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News