செய்திகள்
அதிமுக

அதிமுக சட்டமன்ற கொறடா- துணைத்தலைவர் பதவிக்கு கடும் போட்டி

Published On 2021-06-12 08:37 GMT   |   Update On 2021-06-12 08:37 GMT
அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

சென்னை:

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் வருகிற திங்கட்கிழமை (14-ந்தேதி) நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற துணைத் தலைவர், கொறடா பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்கிறார்கள்.

இதற்காக கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம்எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வேறு யாரையும் அனுமதிக்க இயலாது: இபிஎஸ்-ஓபிஎஸ்

கொறடா பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. துணைத் தலைவர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

இதில் போட்டி பலமாக உள்ளதால் யாருக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News