செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகை

Published On 2021-06-10 09:03 GMT   |   Update On 2021-06-10 09:03 GMT
சேலம் இரும்பாலையில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
சேலம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (11-ந்தேதி) மாலை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் காரில் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வருகிறார். அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்குகிறார். இரவில் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.



மறுநாளான 12-ந்தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் செல்கிறார். அங்கு மேட்டூர் அணை
யை ஆய்வு செய்யும் மு.க.ஸ்டாலின் காலை 10.45 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.

இதன் மூலம் காவிரி டெல்டா பகுதிக்குட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பின்னர் சேலம் இரும்பாலையில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்து பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் அவர் செல்லும் பாதைகளில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் கண்காணிப்பில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Tags:    

Similar News