செய்திகள்
மருத்துவமனையில் கை விரல் துண்டாகி கட்டுப் போடப்பட்டு இருந்த குழந்தை.

செவிலியர் மீது தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை- டீன் பேட்டி

Published On 2021-06-09 03:33 GMT   |   Update On 2021-06-09 03:33 GMT
சின்ன குழந்தை என்பதால் விரல் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது.
தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவமனை டீனுமான ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். நேற்று(அதாவது நேற்று முன்தினம்) வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தபோது ‘டிரிப்’ சென்ற லைனை பிரித்துள்ளார்கள். குழந்தை கையை அசைத்தபோது பெருவிரலின் நுனிபாகம் துண்டாகி விட்டது. உடனே குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், அந்த குழந்தைக்கு தையல் போட்டு இருக்கிறார்.

தையல் போட்டு இருப்பதால் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என அறிய 3 நாட்கள் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு முதல் நாள் ஆகி இருக்கிறது. 2 நாட்கள் காத்திருந்து எப்படி இருக்கிறது என பார்த்து விட்டு முடிவு செய்யப்படும்.

குழந்தை கையை அசைத்ததால் விரல் துண்டாகி விட்டதாக சொல்வது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த செவிலியர் மன உளைச்சலில் 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை. வந்தவுடன் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அந்த செவிலியர் மீது தவறு இருந்தால் நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

செவிலியரின் அலட்சியப்போக்கு காரணமா? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது. விசாரணையின் முடிவில்தான் எது உண்மை என்பது தெரிய வரும். சின்ன குழந்தை என்பதால் விரல் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது. எலும்பு எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் 3 நாட்கள் கழித்துத்தான் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News