செய்திகள்
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

திருப்பூரில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம்

Published On 2021-06-08 10:01 GMT   |   Update On 2021-06-08 12:00 GMT
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக 5,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3.32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள  செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக  நேற்று  24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, முகக் கவசம் அணியாத 23 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.4,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும்  மாவட்டத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரையில் முகக் கவசம் அணியாத நபர்களின் மீது 1,663 வழக்குகளும், பொதுமுடக்கத்தை மீறியதாக 5, 492 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News