செய்திகள்
மழை

குமரியில் மழை நீடிப்பு- சுருளோடு பகுதியில் 24 மி.மீ. பதிவு

Published On 2021-06-07 11:54 GMT   |   Update On 2021-06-07 11:54 GMT
குமரி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று முன்தினம் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 24.2 மி.மீ. பதிவாகி இருந்தது.

இதே போல பேச்சிப்பாறை- 20, சிற்றார் 1-5.4, நாகர்கோவில்-2.2, பெருஞ்சாணி-5.2, புத்தன்அணை-5, சிற்றார் 2-2, தக்கலை-1, பாலமோர்-11.4, ஆனைகிடங்கு-10.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 922 கனஅடி தண்ணீரும், சிற்றாறு 1 அணைக்கு 61 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு 89 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 52 கனஅடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு 11 கனஅடி தண்ணீரும் வந்தது.

குமரி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை 2,263 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 2,012 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு உள்ளதால் ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் மழைக்கு தோவாளை தாலுகாவில் ஒரு வீடும், கல்குளம் தாலுகாவில் 8 வீடுகளும் சேதம் அடைத்துள்ளன.
Tags:    

Similar News