செய்திகள்
கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- 7 பேர் கொண்ட குழு அமைப்பு

கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- 7 பேர் கொண்ட குழு அமைப்பு

Published On 2021-06-05 04:14 GMT   |   Update On 2021-06-05 09:10 GMT
கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழு வரும் 11-ம்தேதிக்குள் ஆன்லைன் வகுப்பிற்கான வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
சென்னை: 

தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.  

கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழு வரும் 11-ம்தேதிக்குள் ஆன்லைன் வகுப்பிற்கான வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. 

நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் உள்ளிட்டவைகளை இந்த குழு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோல் கலை அறிவியல் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கும் புதிய வழிகாட்டுநெறிமுறைகள் வகுக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News