செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி

நடிகை சாந்தினி அளித்த புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

Published On 2021-05-30 13:57 GMT   |   Update On 2021-06-01 04:40 GMT
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார் அளித்த நிலையில், போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் சாந்தினி (36). நாடோடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக புகார் மனு அளித்தார்.

சாந்தினி அளித்துள்ள புகார் மனுவில் கூறியதாவது:-

மலேசியாவை சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசியதுணை தூதரகத்தில் சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக அதைகலைக்கச் செய்தார். தற்போதுஎன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து மிரட்டுகிறார்.

அவருடன் நான் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூகஊடகங்களில் பரவச் செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.

5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைதிருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் சாந்தினி குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் மணிகண்டன் மீது, நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், நடிகை சாந்தி யார் என்றே தனக்கு தெரியாது என மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அப்போது ‘‘நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். அமைச்சராக இருந்த சமயத்தில் என்னை பலர் அரசியல் நிமித்தமாக சந்தித்துள்ளனர். அவர்களில் ஒருவராக சாந்தினி என்னை சந்தித்திருக்கலாம். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தற்போது என் மீது அவர் பொய் புகார் அளித்துள்ளார். எனது அரசியல் எதிரிகளின் பின்னனியில் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.



சில தினங்களுக்கு முன்பு, வழக்கறிஞர் ஒருவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் சாந்தினி உடன் நான் எடுத்ததாக சொல்லப்படும் புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அதை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் மிரட்டினர். புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால், 3 கோடி ரூபாயை என்னிடம் கேட்டனர். நான் பணம் தர ஒத்துக் கொள்ளாததால், படிப்படியாக இறங்கி வந்து 50 லட்சம் ரூபாயை கேட்டனர். என் மீது தவறு இல்லாததால் தொடரப்படும் வழக்கை சட்டரீதியாக சந்திக்க எண்ணி, மறுத்து விட்டேன். என்னை மிரட்டிய பிறகாக, எனது மனைவியையும் செல்போனில் பேசி மிரட்டி உள்ளனர். பணம் பறிக்கும் கும்பல் நடிகை சாந்தினியை பயன்படுத்தி என் மூலம் ஆதாயம் அடைய பார்க்கிறார்கள். நான் இந்த புகாரை சட்ட ரீதியாக சந்திப்பேன்’’ என தெரித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News