செய்திகள்
கைத்தறி நெசவாளர்

கைத்தறி நெசவாளர்களுக்கு நிதி உதவி வழங்க முதல்வருக்கு மனு

Published On 2021-05-28 05:31 GMT   |   Update On 2021-05-28 05:31 GMT
ஊரடங்கால் மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் இதர பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு  நிதி உதவி கேட்டு முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்டு  கட்சி சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சியினர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவி வருவதாலும், இதைத்தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதாலும் கைத்தறி நெசவாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெசவுத்தொழில் மிகவும் தேக்கம் அடைந்துள்ளது. இந்த தொழிலுக்கு மூலப்பொருளான நூல் மற்றும் பாவு கிடைப்பது இல்லை. கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். இதனால் சில இடங்களில் தினசரி செலவுக்கே சிரமப்படுகின்றனர்.

தொற்று பாதிப்பு உள்ள வரை தொழிலில் ஈடுபட முடியாத அவல நிலையில் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர் குடும்பத்தினருக்கு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை  மாதம் ரூ. 7,500  நிதி உதவி வழங்க வேண்டும் என  மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News