செய்திகள்
அமைச்சர் பொன்முடி

ஜூன் 16ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Published On 2021-05-24 13:25 GMT   |   Update On 2021-05-24 13:25 GMT
2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என புதிய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ஜூன் 16-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்வுக்கு பணம் கட்டாமல் இருக்கும் மாணவர்கள் வரும் 3-ம் தேதிக்குள் பணம் கட்டிக்கொள்ளலாம். ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் பணம் கட்ட தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News