செய்திகள்
அகதிகள் முகாமில் கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியாளர்கள்.

இலங்கை அகதிகள் முகாமில் 66 பேருக்கு கொரோனா

Published On 2021-05-24 06:36 GMT   |   Update On 2021-05-24 06:36 GMT
இலங்கை அகதிகள் முகாமில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
உடுமலை:

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் சுகாதாரப்பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில் உடுமலையை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 74 குடும்பங்களில் சுமார் 270 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். 

இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் தளி பேரூராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்தப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல், தெருக்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க தொடர்ந்து தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News