செய்திகள்
குமரவேல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய தலைவர் விலகல்

Published On 2021-05-20 08:02 GMT   |   Update On 2021-05-20 08:02 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளனர்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. தேர்தல் முடிவை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர்  விலகினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்த  எம்.முருகானந்தம். நேற்று விலகினார். இவர்  திருச்சி திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்தவர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு படுதோல்வியை தழுவினார்.

அவருடன் சேர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தொழில் முனைவோர் அணி செயலாளர் வீரசக்தி, துணை செயலாளர்கள் அய்யனார், விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் மற்றும் திருவெறும்பூர் தொகுதியில் 414 வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்கள் 200 பேர் மற்றும் 2,000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்து உள்ளார்.
Tags:    

Similar News