செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி குறைவால் முட்டை விலை அதிகரிப்பு

Published On 2021-05-20 07:26 GMT   |   Update On 2021-05-20 07:26 GMT
முட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி குறைவு காரணமாகவும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் ரூ.4.60 ஆக இருந்த முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.70ஆக நிர்ணயிக்கப்பட்டன.

நாமக்கல்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.

அப்போது கோழி முட்டை பண்ணையாளர்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் அனுப்புவது அதிகரித்து உள்ளது. மேலும் பொது முடக்கத்தால் உற்பத்தி குறைந்துள்ளதாக எடுத்து கூறினர்.

இதையடுத்து முட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி குறைவு காரணமாகவும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் ரூ.4.60 ஆக இருந்த முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.70ஆக நிர்ணயிக்கப்பட்டன.

Tags:    

Similar News