செய்திகள்
விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை

Published On 2021-05-19 14:54 GMT   |   Update On 2021-05-19 14:54 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News