செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

கொரோனா நிவாரண பணிகளுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய அன்புமணி ராமதாஸ்

Published On 2021-05-19 02:34 GMT   |   Update On 2021-05-19 02:34 GMT
தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பா.ம.க.வும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் டாக்டர் என்ற முறையில் நானும் அனைத்து வழிகளிலும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன்.
சென்னை :

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர், தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதும், அதில் இருந்து மக்களை காப்பதும் மிகவும் சவாலான பணி என்பதில் சந்தேகம் இல்லை. கொரோனா தடுப்பு பணிகளுக்காக அனைத்து தரப்பினரும் நிதி வழங்கும்படி தாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததை தொடர்ந்து, பா.ம.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

அவர் அறிவித்தவாறு, எனது ஒரு மாத ஊதியமான ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்தை வங்கி பரிமாற்றத்தின் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, பொதுமக்களை காப்பாற்றுவது தான் நமது முதல் பணியாகும். அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பா.ம.க.வும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் டாக்டர் என்ற முறையில் நானும் அனைத்து வழிகளிலும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News