செய்திகள்
ரமேஷ்-உமா

மனைவியை கொன்றது ஏன்?- கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2021-05-18 03:27 GMT   |   Update On 2021-05-18 03:27 GMT
கடந்த ஒரு வருடமாக எனது மனைவி உமா என்னை அலட்சியப்படுத்தி வந்தார். என்னிடம் சரியாக பேசுவதில்லை.
ராஜாக்கமங்கலம்:

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவருடைய மனைவி உமா (33). இவர்களுக்கு அஜித் (11) என்ற மகனும், காவியா (9) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை நடத்தி வந்தார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரமேஷ், சம்பவத்தன்று இரவு உமாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளிமலை பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருடமாக எனது மனைவி உமா என்னை அலட்சியப்படுத்தி வந்தார். என்னிடம் சரியாக பேசுவதில்லை. உறவுக்கார ஆண்களிடம் அவள் சிரித்து பேசி பழகுவது எனக்கு பிடிக்கவில்லை. இது மட்டுமல்லாமல் எனது ஆசைக்கு இணங்கவும் மறுத்து வந்தார்.

இதனால் உமா மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று அரிவாளால் வெட்டி மனைவியை கொலை செய்தேன்.

இவ்வாறு ரமேஷ் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ரமேசை, குழித்துறை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News