செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு

Published On 2021-05-18 02:51 GMT   |   Update On 2021-05-18 02:51 GMT
கடந்த 1 வார காலமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கூடலூர்:

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி அணையின் நீர்மட்டம் 128.20 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 400 கனஅடியாகவும், வினாடிக்கு 150 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1 வார காலமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் நேற்றைய நிலவரப்படி, நீர்மட்டம் 130.15 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 302 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 1 வாரத்தில் அணையின் நீர்மட்டம் 2 அடி வரை உயர்ந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News