செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

டவ்-தே புயல்: நீலகிரி மாவட்டத்திற்கு 20-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-05-16 07:34 GMT   |   Update On 2021-05-16 07:34 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த புயல் (டவ்-தே) மேலும் வலுப்பெற்று நேற்று மாலை தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து இன்று காலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

17.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

18.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  கடலோர மாவட்டங்கள்  மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

19.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.



20.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  இன்று கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70-80  கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே  90  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

17.05.2021: மத்திய கிழக்கு அரபிக்கடல், பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 145-155  கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே  170  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (சென்டிமீட்டரில்): 
பந்தலூர் (நீலகிரி) 18, சோலையாறு (கோவை) 17, தேவலா (நீலகிரி) 15, வால்பாறை (கோவை ), மேல் பவானி (நீலகிரி) தலா 11, சின்னக்கல்லார் (கோவை) 10, நடுவட்டம் (நீலகிரி) 9, சிவலோகம் (கன்னியாகுமரி) 8, குடலுர் பஜார் (நீலகிரி) 7, குழித்துறை (கன்னியாகுமரி) 6, தேக்கடி (தேனி) 5,  தென்காசி 4, பாபநாசம் (திருநெல்வேலி) தலா 4.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News