செய்திகள்
கோப்புபடம்

ஒரே தவணை முதலீட்டு மானியம்-ஏற்றுமதியாளர்கள் பாராட்டு

Published On 2021-05-16 06:48 GMT   |   Update On 2021-05-16 06:48 GMT
ஒரே தவணை முதலீட்டு மானியம் அறிவித்த தமிழக அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் ஒரே தவணையாக வழங்கப்படும் உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு  ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிததத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறும்போது, முத்திரை தாள் கட்டணம் செலுத்துவதில் இருந்து  வரும் டிசம்பர் மாதம் வரை  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலாவதியாக உள்ள  அனைத்து துறை சார்ந்த உரிமங்கள் வரும் டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. முதலீட்டு மானியங்கள் ஒரே தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. கொரோனாவால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்கட்டான இந்த சூழலில் அரசின் இந்த அறிவிப்புகள்  இன்னல்களில் இருந்து நிறுவனங்கள் மீண்டெழ கைகொடுக்கும். பல்வேறு வங்கிகளில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெற்றுள்ள கடனுக்கான தவணை தொகை செலுத்துவதில்  காலநீட்டிப்பு அனுமதிப்பது குறித்து ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைக்கவேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News