செய்திகள்
டிரோன் கேமராவை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிய சிறுவர்கள்.

டிரோன் கேமரா மூலம் சிறுவர்களை விரட்டியடித்த போலீசார்

Published On 2021-05-16 05:37 GMT   |   Update On 2021-05-16 05:37 GMT
திருப்பூரில் முழு ஊரடங்கு விதிகளை மீறி மைதானத்தில் விளையாடிய சிறுவர்களை போலீசார் டிரோன் காமிரா மூலம் கண்காணித்து விரட்டியடித்தனர்.
திருப்பூர்:

கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு அமலில் உள்ளதையடுத்து திருப்பூர் மாநகரில் போலீசார்  அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி   சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கொரோனா தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் மாணவர்கள் பலர்  வயல்வெளி மற்றும் மைதானங்களில் கிரிக்கெட் விளையாடி  வருவதாகவும், இதன் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
 
இதையடுத்து பெருமாநல்லூர் பகுதியில்  போலீசார் டிரோன்  கேமராவை பறக்க விட்டு முழு ஊரடங்கை பொதுமக்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்களா? சிறுவர்கள் யாராவது மைதானங்களில் விளை யாடுகிறார்களா? என்று  அதிரடி ஆய்வில்  ஈடுபட்டனர்.

அப்போது பெருமாநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தது  டிரோன் கேமரா மூலம் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  

இதனிடையே  டிரோன் கேமராவை பார்த்ததும் சிறுவர்கள், இளைஞர்கள் அங்கிருந்து சிதறி அடித்துக்கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.  தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார்  எச்சரிக்கை விடுத்ததுடன்,  விளையாடுவதன் மூலம் கொரோனா எளிதில் பரவி விடும். எனவே  முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.  


Tags:    

Similar News