செய்திகள்
கொரோனா சிகிச்சை மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்

கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு

Published On 2021-05-16 01:36 GMT   |   Update On 2021-05-16 01:36 GMT
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது. 1,500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூடுதலாக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் கொரோனா சிகிச்சை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அங்கு 300 ஆக்சிஜன் படுக்கைகளுடன் 750 படுக்கை வசதிகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதி, மின்விசிறி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கிரண்குராலா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோரிடம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.

இ்ந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், எம்.பி.கவுதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மணிகண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், தாசில்தார் பிரபாகரன், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு மற்றும் டாக்டர்கள், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News