செய்திகள்
கடைக்கு சீல்

ஆற்காட்டில் விதியை மீறி திறந்த கடைக்கு சீல்

Published On 2021-05-14 13:39 GMT   |   Update On 2021-05-14 13:39 GMT
அதேபோல் பகல் 12 மணிக்கு மேல் திறந்து வியாபாரம் செய்த மற்றொரு கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோட்டில் பல்பொருள் அங்காடி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருப்பது தெரியவந்தது. இந்த கடையை திறந்து வியாபாரம் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு தாசில்தார் காமாட்சி ரூ.5,500 அபராதம் விதித்து கடைக்கு ‘சீல்’ வைத்தார்.

அதேபோல் பகல் 12 மணிக்கு மேல் திறந்து வியாபாரம் செய்த மற்றொரு கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News