செய்திகள்
முககவசம்

நாமக்கல் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-05-14 10:57 GMT   |   Update On 2021-05-14 10:57 GMT
சமூக இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிற்க வைத்து வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல் வட்டாரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிற்க வைத்து வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News