செய்திகள்
அபராதம்

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 20 கடைகளுக்கு அபராதம்

Published On 2021-05-14 09:34 GMT   |   Update On 2021-05-14 09:34 GMT
கும்பகோணத்தில் சுற்றுவட்டார பகுதியில் அரசு விதிமுறைகளை பின்பற்றாத 20 கடைகளுக்கு அபராதமும், இரண்டு கடைகளுக்கு சீலும் வைக்கப்பட்டது.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தாராசுரம் பகுதி ஆழ்வான் கோவில் தெரு, பெரிய தெரு, மேலக்காவேரி, உச்சி பிள்ளையார் கோவில் மடத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்று கண்காணிப்பு பணியில் வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் விமல் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

அப்போது விதியை மீறி பல்வேறு பகுதியில் ஜவுளிக்கடைகள் தையல் கடைகளை சலூன் கடைகள் திறந்து வியாபாரம் செய்த கடை உரிமையாளருக்கு 1000 முதல் 5000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டு 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மற்றும் டீ கடைகள் மளிகை கடைகள் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்த கடைகளுக்கு ரூ.500 முதல் 5000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

கும்பகோணம் நகராட்சி பகுதியில் அரசு அனுமதியை மீறி ரகசியமாக வியாபாரம் பார்த்த வந்த ஜவுளி கடைகளுக்கு நகராட்சி ஆணையர் லட்சுமி தலா ரூ.5000 அபராதம் விதித்தார். தொடர்ந்து இதுபோல் வியாபாரம் செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தார்.

Tags:    

Similar News