செய்திகள்
ரெம்டெசிவிர்

சென்னையில், இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை

Published On 2021-05-13 22:06 GMT   |   Update On 2021-05-13 22:06 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர்
சென்னை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர். கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

இதனால் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் சென்னையில் மருந்து வாங்க வருவோர் கூட்டம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் மக்கள் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 4 கவுண்ட்டர்கள் மூலம் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது என மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News