செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-05-13 10:56 GMT   |   Update On 2021-05-13 10:56 GMT
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தையார் செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் அவர்களுக்கும் , அவரது குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். 
Tags:    

Similar News