செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு

Published On 2021-05-13 04:53 GMT   |   Update On 2021-05-13 04:53 GMT
பிற மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது அதிகரித்துள்ளதும், பொது முடக்கத்தால் விற்பனை உயர்ந்துள்ளதும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.

நாமக்கல்:

கொரோனா ஊரடங்கு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

பிற மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது அதிகரித்துள்ளதும், பொது முடக்கத்தால் விற்பனை உயர்ந்துள்ளதும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி ஒரு முட்டை விலை ரூ. 4.50ஆக நிர்ணயிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-

ஆமதாபாத் ரூ.4.80, பெங்களூரு ரூ.4.70, சென்னை ரூ.4.70, சித்தூர் ரூ.4.63, மும்பை ரூ.5, விஜயவாடா ரூ.4.61.

Tags:    

Similar News