செய்திகள்
எல்.முருகன்

உயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: எல்.முருகன்

Published On 2021-05-13 02:37 GMT   |   Update On 2021-05-13 02:37 GMT
அ.தி.மு.க. அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை செய்தபோது கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றி பேசுவது அழகல்ல.
சென்னை :

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த ஆட்சியிலும் கூட இதே ரூ.25 லட்சம் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஏதோ அதிகப்படுத்தியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த ஆண்டு தி.மு.க. கூட்டணி கட்சியினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அ.தி.மு.க. அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை செய்தபோது கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றி பேசுவது அழகல்ல. ஆகவே உடனடியாக முதல்-அமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News