செய்திகள்
கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி

மடிக்கணினி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

Published On 2021-05-12 02:11 GMT   |   Update On 2021-05-12 02:11 GMT
மடிக்கணினி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கதனேசன்- தமிழ்செல்வி தம்பதியரின் மகள் சிந்துஜா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மடிக்கணினி வாங்க, உண்டியலில் பணம் சேர்த்து வந்தார்.

சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2-வது பரிசாக ரூ.500 பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார்.

தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்புகள் குைறய தமிழக முதல்-அமைச்சருக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.

எனவே தான் ஆசையாக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த கதனேசன், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1,500-ஐ வங்கியில் கொடுத்து வரைவோலையாக எடுத்தார். பின்னர் அதனை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நேற்று மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News