செய்திகள்
சென்னை உயர்நீதி மன்றம்

உலகின் தலைசிறந்த முதல் 200 கல்வி நிறுவனங்களில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Published On 2021-05-11 13:06 GMT   |   Update On 2021-05-11 13:06 GMT
சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறியியல் கல்லூரிக்கான தன்னாட்சி அந்தஸ்து கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் ‘‘உலகின் தலைசிறந்த முதல் 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எந்த கல்வி நிறுவனங்களும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது’’ என்ற கருத்தை பதிவு செய்தது,

மேலும், தன்னாட்சி அந்தஸ்து கோரும் விண்ணப்பத்தை யுஜிசி சுதந்திரமாக பரிசீலித்து 2 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News