செய்திகள்
கடைக்கு சீல்

சென்னையில் ஒரு வாரத்தில் விதிமுறைகளை மீறிய 156 கடைகளுக்கு சீல்

Published On 2021-05-11 04:21 GMT   |   Update On 2021-05-11 04:21 GMT
சோழிங்கநல்லூர் பகுதியில் 20 கடைகளும், வளசரவாக்கம் பகுதியில் 18 கடைகளும், கோடம்பாக்கத்தில் 16 கடை களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகளை திறக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தளர்வுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் முககவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட குற்றத்துக்காக கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 156 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் பகுதியில் 22 கடைகள் இதுபோன்று மூடப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் பகுதியில் 20 கடைகளும், வளசரவாக்கம் பகுதியில் 18 கடைகளும், கோடம்பாக்கத்தில் 16 கடை களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளிடம் இருந்து ரூ.15.2 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News