செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணிக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்- முதலமைச்சர் உத்தரவு

Published On 2021-05-09 15:12 GMT   |   Update On 2021-05-09 15:41 GMT
கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர்கள் நியமித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருகிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கீழ்காணும் அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர் பாபு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் தா.மோ அன்பரசன், கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கா. ராமச்சந்திரன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் சா.முக நாசர், மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பி மூர்த்தி, பழனிவேல், தியாகராஜன், ஈரோடு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, சேலம் மாவட்டத்திற்கு வி.செந்தில்பாலாஜி, 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் , திருச்சி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கேஎன்நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ஐபெரியசாமி, தங்கம் தென்னரசு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு எவ.வேலு, வேலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி , விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News