செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Published On 2021-05-08 16:22 GMT   |   Update On 2021-05-08 16:22 GMT
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 241 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மேலும் 6,846 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சிகளுக்கு ரூ.14 கோடி, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
Tags:    

Similar News