செய்திகள்
அரசு பேருந்துகள்

நகர பேருந்துகளில் இன்று முதல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

Published On 2021-05-08 02:26 GMT   |   Update On 2021-05-08 02:26 GMT
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று கையெழுத்திட்டார்.
சென்னை:

தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தான் தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், மே 16-ந்தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். 



அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது இந்த திட்டங்களில் ஒன்றுதான். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் இந்த திட்டம் அமலாகிறது. 

தமிழக அரசு போக்குவரத்துக்கு கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம். 

அதன்படி இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டணம் கொண்ட நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News