செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் விவரங்களை அறிந்து கொள்ள புதிய இணையதளம்

Published On 2021-05-07 17:11 GMT   |   Update On 2021-05-07 17:11 GMT
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் விவரங்களை அறிந்து கொள்ள புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் நோயாளிகளுக்கு ஆம்புலம்ஸிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள தமிழக அரசு இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org என்னும் வலைதளத்தின் மூலம் 

1. ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள்

2. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள்

3. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் 

ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News